மொத்த மற்றும் சில்லறை விற்பனை செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக, பேருவளை மீன்பிடி துறைமுகத்தை மீள திறக்க இடமளிக்குமாறு வலியுறுத்தி, மீனவர்கள் சிலர், பேருவளை துறைமுகத்துக்கு முன்பாக அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார நிபந்தனைகளுக்கு அமையவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், சுகாதார வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென, பேருவளை துறைமுக முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்று 22 அதிகாலை 5.00 தொடக்கம் மு.ப 9.00 மணிவரை அனுமதி வழங்கப்பட்டதாக, முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்