இஸ்லாம் உள்ளிட்ட சகல மதத் தலைவர்களும், கொரோனாவிலிருந்து நாட்டை மீட்பதற்காக வழிபாடுகளை முன்னெடுக்க பிரதமர் கோரிக்கை



கொவிட்-19 வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டையும் உலகத்தையும் மீட்பதற்காக சகல பௌத்த , இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் மதத் தலைவர்களை மத வழிபாடுகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், ப&##3007;ரதமருமான மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வ மத வழிபாட்டு தளங்களிலும் வழமையாக இடம்பெறும் வழிபாடுகளைப் போன்று இவ்வழிபாடுகளையும் முன்னெடுக்குமாறும் அமைச்சின் செயலாளரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்