இந்த அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடமாகியுள்ள நிலையில் அரசாங்கம் முற்றாக தோல்வியடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்எம் மரிக்கார் இதனை தெரிவித்துள்ளார்.இந்த அரசாங்கத்தின் திறைமையின்மையால் மக்கள் மீது கடும் சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்
தற்போது நாட்டின் சில பகுதிகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன, மக்கள் அச்சம் காரணமாக வீட்டிலிருந்து வெளியேவருவதற்கு அச்சப்படுகின்றனர், போக்குவரத்துமுறை சீர்குலைந்துள்ளது.பொருளாதாரம் பலவீனமாகியுள்ளது அதேவேளை அவர்கள் கல்விதுறைக்கு விவசாயதுறைக்கும் கடும் பாதிப்புகளை உருவாக்கியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தற்போதைய நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு விஞ்ஞானத்தை நம்புவதற்கு பதில் புராணநம்பிக்கைகளை நம்புகின்றது என எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அரிசியை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் உள்ளதால் இன்றைய ஒரு வருட பூர்த்தியை பாற்சோறு உண்டு கொண்டாட முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்