மேல் மாகாணத்தை சேர்ந்த வியாபாரிகளினால் மரக்கறி விலை உயர்வு.




தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், மேல் மாகாணத்தை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் மரக்கறிகளை கொள்வனவு செய்தமையால் மரக்கறி விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நாள்களை விட இன்று (04) காலை தம்புள்ளை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அதிகளவில் வந்திருந்த மேல் மற்றும் தென் மாகாண வியாபாரிகள் மரக்கறிகளை கொள்வனவு செய்துள்ளனர்.

இதன்போது, வியாபாரிகளிடம் காணப்பட்ட வரையறுக்கப்பட்ட கையிருப்புகளை அதிக விலைகொடுத்து வாங்கியுள்ளதால் மரக்கறி விலை அதிகரித்துள்ளது.

கடந்த சில நாள்களாக அதிக விலை இல்லாமையால் பொருளாதார மத்திய நிலையத்துக்கு குறைந்தளவான மரக்கறிகளே இன்று கொண்டுவரப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்