நமது நாட்டில் இனவாதத்துக்கப்பால் எப்போது தலைவரொருவர் தெரிவாகுவார்? மங்கள



இனவாதம் மற்றும் மதவாதத்துக்கப்பால் தகுதி ,திறமை அடிப்படையில் இலங்கையில் எப்போது ஒரு தலைவரைத் தெரிவுசெய்யப்போகின்றார்களெனக் கேள்வியெழுப்பிய முன்னாள்அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் தெரிவு செய்யப்பட்டமை ஓர் எடுத்துக் காட்டாகுமெனவும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். 

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடனும் உபஜனாதிபதியாக கமலா ஹரிஸும் தெரிவாகியிருக்கும் இவ்வேளை, அமெரிக்காவின் முதலாவது பெண் உப ஜனாதிபதி என்ற பெருமையை கமலா ஹரிஸ் தனதாக்கியிருக்கும் நிலையில், உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணமுள்ளன.

இவ்வாறு தனது வாழ்த்துகளை வெளிப்படுத்தும் விதமான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்