2 ஆயிரம் கிலோகிராமுக்கும் அதிகமான மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மீட்பு

ADMIN
0


மாம்புரி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 125 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுத் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, நுரைச்சோலை பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 67 பொலித்தீன் உரைகளில் அடைக்கபட்ட 2,125 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், மாம்புரி பகுதியில் உள்ள வீட்டொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 மஞ்சள் பொதிகளையும், கடற்கரை பகுதியில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 மஞ்சள் பொதிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default