மாலைதீவிற்கு வருமாறு இலங்கையின் முஸ்லீம்களிற்கு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்கவேண்டுமென அந்த நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தன்யா மமூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை முஸ்லீம்களை மாலைதீவிற்கு வருமாறு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்காதமை தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை முஸ்லீம்களை அந்த நாட்டிலிருந்து மாலைதீவிற்கு வந்து வசிக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் அரசாங்கம் இதனை செய்யாதது குறித்து நான் ஆச்சரியமடைந்துள்ளேன்,என குறிப்பிட்டுள்ள அவர்,
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களுக்கு தங்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்கம் செய்வதற்கு சிறுபான்மை முஸ்லீம்களின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் மதிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 கருத்துகள்