நமது சமூகத்தின் உணர்ச்சிக்கு அளவே இல்லை.! (ஒரு நிமிடம் இதை வாசிக்கவும்.)

 


சோடா போத்தல்களாக இருக்கின்றார்கள் நமது சமுதாயம்.


நமது நாட்டில் பல்லின மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அதிலும் குறிப்பாக சிங்கள மக்கள் பெரும்பான்மையாகவும் தமிழ் முஸ்லிம் சிறுபான்மையாகவும் வாழ்கின்றனர்.


தமிழ் மக்கள் தமக்குத் தேவையான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள சிலகாலம் அஹிம்சை வழியிலும் முப்பது வருடம் ஆயுதப் போராட்டத்திலும் அர்ப்பணித்து கடைசியில் தோல்வியுற்ற நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.


முஸ்லிம்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தின் உச்சத்தில் அன்றுதொட்டு இன்றுவரை வியாபார ரீதியில் இந்த நாட்டுக்கு அதிகளவான பங்களிப்பை செலுத்துகின்றார்கள்.


இருந்தாலும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலம் தொட்டு இன்று வரை இனக் கலவரங்களும் மதங்களுக்கிடையிலான கலவரங்களும் நமது நாட்டில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.


ஆனால் தற்போது சிங்கள மக்களின் அதிக வாக்குகளைப் பெற்று ஒரு அரசாங்கம் நமதுநாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றது.


இருந்தாலும் இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கும் வெளிநாட்டு சக்திகளால் தற்போது இலங்கையில் அனைத்து மக்களுக்கும் நல்ல விடயங்கள் நடந்துவிட்டால் தாம் நினைத்ததை சாதிக்க முடியாது என்ற ஒரு எண்ணத்தில் சில திருவிளையாடல்களை தமிழ் பிரதிநிதிகள் ஊடாக செயற்படுத்த பாரிய திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.


இதைப் புரியாமல் நமது இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு தனது புத்திகளை மழுங்கடிக்கச் செய்து சில பதிவுகளை முக நூல்களில் பறக்க விடுகின்றார்கள்.


ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுத கதையாய் அன்று உயர்நீதிமன்றத்தில் சுமந்திரன் முஸ்லிம்கள் சார்பாக வாதாட வருகின்றார், இன்று பாராளுமன்றத்தில் முஸ்லீம்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் விவாதிக்கிறார்கள்.


வடக்கில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் உரிமை கேட்டு போராடுகின்றார்கள் நான் இனவாதியாக மதவாதியாக சிந்திக்கவில்லை இந்த நாட்டில் மூன்று இனமும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இருக்கின்றவன்.


ஆனால் வெளிநாட்டு சக்திகளின் ஊதுகுழலாக ஒரு சில தமிழ் மக்கள் பிரதிநிதிகள் முஸ்லிம்களின் பிரச்சினைகளை வேறு திசையில் கையாண்டு இந்த நாட்டை மீண்டும் சுடுகாடாக எத்தனிக்கின்றார்கள்.


30 வருட யுத்தத்தின் பின் தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்று ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கின்றது.


 இந்த ஆட்சிக்கு முன்பு நல்லாட்சி அரசாங்கத்தை முழுமையாக நடத்திச் சென்ற பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு உரியது இருந்தும் அந்த காலகட்டங்களில் அவர்கள் தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களை பெற்றுக் கொடுக்கவில்லை சுமந்திரன் என்றவர் நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக திகழ்ந்தவர் இருந்தும் அந்த மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவில்லை.


அப்படிப்பட்டவர் தற்போது முஸ்லிம்களுக்காக நீதி கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது.


சுமந்திரன் வழக்கு தொடர்ந்து அது வெற்றி பெறுமா?


சாணக்கியன்  பாராளுமன்றத்தில் பேசிய விடயம் நிறைவேற்றப்படுமா?


வடமாகாணத்தில் தமிழ் மக்கள் முஸ்லீம்களுக்கு நீதி கிடைக்க போராட்டங்கள் நடத்தி அதில் நீதி கிடைக்குமா?


பாரதூரமான  விஷயங்களை இவர்கள் மிகவும் கச்சிதமாக செய்து கொண்டிருக்கின்றார்கள் இதை புரியாமல் நமது இளைஞர்களின் சில முகநூல் பதிவுகளை பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது.


எனவே தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ்ந்தால் தான் இந்த நாடு ஒரு சிறந்த நாடாக காட்சியளிக்கும் ஆனால் இனங்களுக்கிடையிலான விரிசல்களை உருவாக்குவதற்காகவே சில சக்திகள் வெளிநாடுகளில் உதவிகளுடன் சில விடயங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள் அதில் நமது மக்கள் அந்த அலையில் இழுத்துச் செல்லப்படுகிறார்கள் என்பது மிகவும் கவலையான விடயமாகும்.


நன்றாக சிந்தித்து இந்த காலகட்டங்களில் நடந்துகொள்ள அனைத்து இளைஞர்களையும் கேட்டுக்கொள்கின்றேன்.


நமது உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அதில் குளிர்காயலாம் என்று சில சக்திகள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் அதற்கு நாம் இரையாக ஒரு போதும் இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் பதிவுகளை விடுகின்றேன்.


என்றும் தமிழ் உறவுகளை கௌரவமாக நேசிப்பவன் நான்.


ஆனால் நரி வேஷம் இடுபவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டிய ஒரு காலத்தில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.


தற்போது இருக்கும் அரசாங்கம் மனச்சாட்சியுடன் நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இன்னும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.


ஆனால் திசைமாறி செயற்படுத்த சில சக்திகள் ஓநாய்களாக வலம் வருபதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.


நன்கு சிந்திக்கவும் !


ரீ எம் ஐய்யுப்

பிரதேச சபை உறுப்பினர்

அக்கரைப்பற்று.

கருத்துரையிடுக

0 கருத்துகள்