கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் ஜனாஸாக்களை, நிலத்தடி நீர் மட்டம் மிகவும் ஆழமாகக் காணப்படுகின்ற வறண்ட நிலப்பரப்புக்களில் அடக்கம் செய்வது குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, உரிய தரப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களை ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்து தொடர்பில் சுகாதார பிரிவினருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
நீதி அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர்களான பவித்ரா வன்னியாராட்ச்சி, ரோஹித்த அபேகுணவர்தன, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
அத்துடன், இராஜாங்க அமைச்சர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.முணசிங்க உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளும் இந்த சந்திப்பிற்கு பிரசன்னமாகியிருந்தனர்.
கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் உடலில், குறித்த வைரஸ் சுமார் 36 மணித்தியாலங்கள் தொடர்ந்தும் இருக்கும் சுகாதார அதிகாரிகள், பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
ஆரோக்கியத்தை பாதிக்கின்ற விடயங்களை, இனம் மற்றும் மதம் என்ற அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என பிரதமர் கூறியுள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதற்கு அனைத்து இன மக்களும் ஒத்துழைப்புக்களை வழங்குவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார பிரிவின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக்களை பெற்றுத்தருமாறு பிரதமர், முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளிடம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் ஊடக பிரிவு

0 கருத்துகள்