இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் 95ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடி கொண்டிருக்கும் நிகழ்ச்சி நிரலில் அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வுகள் நேர்முகப் பரீட்சையின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இதில் முஸ்லிம் சேவை பணிப்பாளராக முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட அமைப்பாளரும், ஒலிபரப்பாளருமான ஜனாபா எம்.ஜே. பாத்திமா ரினோஸியா புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முஸ்லிம் சேவையின் முதல் பெண் பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
