ஜனாஸா எரிப்பை நிறுத்த கொங்கிரீட் கல்லறைகளை அமைக்கும் திட்டம் முன்மொழியப்படவுள்ளது.
சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் - Colombo Gazatte க்கு இதனை தெரிவித்துள்ளார். அடுத்த கூட்டத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவால் இந்த திட்டம் முன்வைக்கப்படும் என்று கூறினார்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் மரணித்த உடலை அடக்கம் செய்ய concrete கல்லறைகளை உருவாக்க பொருத்தமான வறண்ட நிலம் பார்க்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால், கட்டாயமாக தகனம் செய்யப்படும் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று தான் கருதுவதாக டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய பொருத்தமான நிலத்தைக் கண்டுபிடிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமீபத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
சுகாதார அமைச்சகம், அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர் இந்த வழிகாட்டலை வழங்கினார்.

0 கருத்துகள்