இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உடல் எரிப்பிற்கு எதிராக மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுவில் முக்கிய தீர்மானம்.
December 26, 2020
0
ஈரோடு மாநகரில் கூடிய
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுவில் இலங்கை மக்களின் ஜனாஸா எரிப்பு சம்மந்தமான தீர்மானம் ஒன்று நிறை வேற்றப்பட்டதாக தமிழ் நாட்டு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிறுவுனரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிறுவாக குழு உறுப்பினருமான குனங்குடி அனிபா தெரிவித்தார்.
இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உடல் எரிப்பிற்கு வெளியிடப்பட்ட கண்டனத்தில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனாவினால் உயிர் இழக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்களின் உடல்களை தொடர்ந்து இலங்கை அரசு எரித்து வருகின்றது.
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களுக்கு விரோதமான சிங்களப் பேரினவாத இலங்கை அரசு இந்த கொடுங்கோன்மையை நடத்தி வருகின்றது.
சென்னை உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த அராஜகத்தை நிறுத்தக் கோரி கண்டனப் போராட்டங்கள் நடைபெற்ற போதினும், இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலுவாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதினும் தொடர்ந்து பச்சிளம் பாலகர்களின் சடலத்தையும் எரிக்கும் இலங்கை அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன் இந்த மனிதாபிமானமற்ற அநாகரீகப் போக்கைக் கைவிடுமாறு இச்செயற்குழு அழுத்தமாக வலியுறுத்துகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
