முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்கர்களின் சடலங்களை பலவந்தமாக எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான கண்டன ஆர்பாட்டம் இன்று(21) முற்பகல் பொரளை மயானத்திற்கு முன்பாக இடம்பெற்றிருந்தது.
குறித்த ஆர்பாட்டத்தை ''விடுதலை இயக்கம்'' ஏற்பாடு செய்ததுடன், மூவின மக்களும் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். இதன் போது வெள்ளை சீலையை கட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திருந்தனர்.
