கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முடியும் - தண்ணீரில் வைரஸ் பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை - நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிப்பு.



(நிபுணர் குழுவின் அறிக்கையே இது)



கொரோனா உடல்களை அடக்குவதா? எரிப்பதா? என்பது பற்றிய இறுதி தீர்மானம் எடுப்பதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு கொரோனா ஜனாஸாக்களை எரிக்கவும் முடியும் அடக்கம் செய்யவும் முடியும் என இரண்டுக்கும் அனுமதி வழங்கி தனது இறுதி அறிக்கையை சமர்பித்துள்ளது.




கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு இலங்கை முஸ்லிம் சமூகம் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றது.




உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம்கள் தொடர்ந்து தமது எதிர்ப்புகளை ஆர்பாட்டங்களின் ஊடாக தெரிவித்து வருகின்றனர்.




இறந்த உடலை 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்ய வேண்டும் எனவும், உடல் அடக்கம் செய்யும் போது இரட்டை உடல் பை போடப்பட வேண்டும் என்றும் குறித்த அறிக்கையில் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.




குறிப்பாக கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்த பின் தண்ணீரின் மூலம் வைரஸ் பரவும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது என்றும் நிபுணர் குழு மிகத் தெளிவாக தெரிவித்துள்ளது.




ஜனாஸா அடக்கம் அல்லது எரிக்கும் போது முடிந்தவரை மரணித்தவரினதும், அவருடைய குடும்ப உறுப்பினர்களினதும் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




11 பேர்கள் கொண்ட இந்த விசேட நிபுணர் குழுவில் பேராசிரியர் ஜெனீபர் பெரேரா, பேராசிரியர் நீலிகா மாலவிகே உட்பட வைரஸ் பற்றிய ஆய்வாளர்களும் நுன்னுயிர் ஆய்வாளர்களும் அடக்கம்.










கருத்துரையிடுக

0 கருத்துகள்