வவுனியா சாளம்பைக்குளத்தை பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மட் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தவிசாளராக 24.12.2020 ம் திகதி நடைபெற்ற அதி உயர்பீட கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒய்வு நிலை அதிபரான இவர் கட்சியின் ஆரம்பகர்த்தாகளில் ஒருவர் தேசிய தலைவரின் அரசியலில் நீண்ட காலம் பயணித்தவரும் , அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும் , மக்கள் தொடர்பு அதிகாரியாகவும், உப்புக்கூட்டுஸ்தாபனம், சீனிகூட்டுஸ்தாபனம் ஆகியவற்றின் நிறைவேற்று பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.
வவுனியா மாவட்ட இணைப்புச் செயலாளராகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வவுனியா மாவட்ட மத்திய குழு தலைவராகவும் சேவையாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் உயர் பதவியை வழங்கியதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் தலைவருக்கும் வன்னி மாவட்ட மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்

0 கருத்துகள்