அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளராக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். ஏ. எம் அஷ்ரப் தாஹிர் நியமனம்.


கடந்த 04.01.2021 யில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளராக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். ஏ. எம் அஷ்ரப் தாஹிர் அவர்களை கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் எஸ். சுபைதீன் அவர்கள் கடிதம் மூலம் தவிசாளர் அஷ்ரப் தாஹிர் அவர்களுக்கு அறிவித்திருக்கின்றார்.


அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது  வேரூன்றி கிளை பரப்பவும், அம்பாரை மாவட்டத்தில் முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பெற்றுக்கொள்ளவும் கடந்த காலங்களிலும் தற்போதும் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டுக் கொண்டிருப்பவரே அஷ்ரப் தாஹிர். 


கட்சிப் பணியில் மட்டுமல்லாமல் நமது சமூகம் நெருக்குதல்கள் மற்றும் இன்னல்களுக்கு முகங்கொடுக்கும் போதெல்லாம் துணிந்து களம் கண்டு குரல் கொடுப்பதிலும் முன்நிற்பவர் அஷ்ரப் தாஹிர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மக்கள் சேவகர் அஷ்ரப் தாஹிர் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.


இந்த சந்தர்பத்தை வழங்கி நிந்தவூர் மக்களையும் அம்பாரை மாவட்ட மக்களையும் மீண்டும் கெளரவித்த  தலைமைக்கும் உளப்பூர்வமான நன்றிகளும் பிரார்த்தனைகளும் 


#முர்ஷித்

கருத்துரையிடுக

0 கருத்துகள்