சிலோன் முஸ்லிம் இணையத்தின் ஊடக அனுசரணையில் TOI நிருவனத்தின் ஜனாஸா சந்தூக் பள்ளி நிருவாகங்களிடம் கையளிக்கப்பட்டது.


 சிலோன் முஸ்லிம் இணையத்தின் ஊடக அனுசரணையில் TOI (The Teaching of Islam) அமைப்பினால் தயார் செய்யப்பட்ட ஜனாஸா சந்தூக் இன்று (27) பள்ளிகளின் நிருவாகங்களிடம் கையளிக்கப்பட்டது.


அதன்படி கெகுணகொல்ல பஸார் மஸ்ஜித்,  மஸ்ஜிதுன் நூர் பொதுஹெர, வதஹகட ஜூம்ஆ மஸ்ஜித், பன்னவ தக்கிய மஸ்ஜித், கடகபொல மஸ்ஜித் ஆகிய பள்ளிகளின் நிருவாகங்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.


TOI நிருவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் இப்திகார் ஸாதிக்கின் தூர நோக்கு சிந்தனையில் TOI (The Teaching of Islam) அமைப்பின் அங்கத்தவரும் முன்னாள் விமான படை அதிகாரியுமான அஸாம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிலோன் முஸ்லிம் இணையத்தின் ஊடக பிரதானி ரிம்சி ஜலீல் உட்பட பள்ளியின் நிருவாக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.






கருத்துரையிடுக

0 கருத்துகள்