இலங்கை சுதந்திர ஊழியர் காங்கிரஸ் எனப்படும் தொழிற்சங்கத்திற்கு சொந்தமான 3.9 மில்லியன் ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்தன.
குறித்த வழக்கு இன்று (8) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே முன் விசாரணைக்கு வந்தது.
அதன்போது குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லாததால் தனது கட்சிக்காரரை விடுவிக்குமாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் சட்டத்தரணி நீதிமன்றில் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
மேலும் ,இதனை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்தார்.

0 கருத்துகள்