இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை, 24 ஆம் திகதி நடைபெற்றது.
இச் சந்திப்பின் போது, இலங்கை முஸ்லிம்கள் விவகாரம், ஜனாஸா எரிப்பு விவகாரம் என்பன விளக்கமாக கலந்துறைையாடப்பட்டது.
இதன்போது, கருத்து வெளியிட்ட பாாகிஸ்தான் பிரதமர் இம்ரான் காான் ஜனாஸா விவகாரம் குறித்து தான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் கதைத்தேன் அவர்களிடமிருந்து சாதக பதில் கிடைத்துள்ளது.
எனினும் இவ்விவகாரங்களை விலாவாரியாக, நாம் ஊடகங்களில் பகிரங்கப்படுத்த தேவையில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும் முழு இணக்கம் வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்திப்பில் நீதி அமைச்சர் அலி சப்ரியும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்