கொரோனா தொற்றை கைபேசி மூலம் பரிசோதிக்கலாம் – பிரான்சில் புதிய முயற்சி

 


உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கள் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவரை பிரான்ஸில் 3,629,891 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கொரோனாவினால் பிரான்ஸில் இறந்தவர்களின் எண்ணிக்கை 85,044ஆக காணப்படுகின்றது. 


மேலும் பிரான்ஸில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கிய நிலையில் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் செல்போன் மூலம் கொரோனா தொற்றை கண்டறிய புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் சளி மாதிரி பரிசோதிக்கும் கருவி ஒன்றை செல்போனுடன் பொருத்தினால் அதன் மூலம் கொரோனா தொற்றை கண்டறிய இயலும் எனவும், சோதனையில் 90% சரியான முடிவுகளை  இது அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்