கொரோனாவை கட்டுப்படுத்திய 10 நாடுகளின் பட்டியலில் இலங்கை

உலகில் கோவிட்19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்திய 10 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது.

சிறந்த முறையில் கோவிட்டை கட்டுப்படுத்திய 10 நாடுகளில் இலங்கையை உலக சுகாதார அமைப்பு உள்ளடக்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் பொருட்களின் விலையை ஒரே மட்டத்தில் கொண்டு செல்வது வரலாற்றில் இதுவரை இல்லாத சவால் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்