ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள போதிலும் 14 ரயில் சேவைகள் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில் சாரதிகள் உள்ளிட்ட ரயில்வே உத்தியோகத்தர்களுக்கு எதிரான நியாயமற்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் பல்வேறு தடவைகள் கலந்துரையாடியிருந்த போதிலும் உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே ஆகியோருக்கிடையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

0 கருத்துகள்