45 சடலங்கள் இதுவரை அடக்கம்


நாட்டில் பல பிரதேசங்களில் கொவிட்19 தொற்றால் உயிரிழந்தோரில் 45 பேரின் சடலங்கள் இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் இதுவரை நிலவி வந்த பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓரிரு சடலங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், அவற்றையும் உரிய முறையில் அடக்கம் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி பிரதேசத்திலேயே, கொவிட் சடலங்கள் தற்போது அடக்கம் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்