இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிகெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
மேற்கிந்தியாவின் Antigua விலுள்ள நோர்த் சவுண்ட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதனடிப்படையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களை பெற்று கொண்டது.
இலங்கை அணிசார்பில் தனுஷ்க குணதிலக 96 ஓட்டங்களையும், தினேஷ் சண்டிமால் 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அத்துடன், மேற்கிந்திய அணிகள் சார்பில் jason mohammed 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
இதன்படி, 274 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49 தசம் 4 ஓவர் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியலக்கை கடந்தனர்.
இந்தநிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் முதலாவது விக்கெட் இணைப்பாட்டமாக Elwin Lewis மற்றும் Shai Hope ஆகியோர் 192 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டமை இந்த போட்டியின் விசேட அம்சமாகும்.
மேற்கிந்திய திவுகள் அணி சார்பில் அதிக பட்சமாக Elwin Lewis 103 ஓட்டங்களையும், Shai Hope 84 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணிசார்பில் அதிக பட்சமாக திசர பெரேரா 2 விக்கெட்க்களை கைப்பற்றியுள்ளார்.
இந்த போட்டியின் நாயகனாக மேற்கிந்திய திவுகள் அணி சார்பில் சதம்பெற்ற Elwin Lewis தெரிவு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை 2க்கு பூச்சியம் என்ற வகையில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்