
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள பாடசாலைகள், இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக, நாளை (15) திறக்கப்படுமென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், மேல் மாகாணத்தில் தரம் 5,11 மற்றும் 13 வகுப்பு மாணவர்களுக்காக மாத்திரமே, நாளை (15) பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
மேல் மாகாணத்தில் ஏனைய வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி மீள ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்