மேலும் 7 சடலங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல்!





மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் மேலும் 7 சடலங்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த பகுதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 38 பேரின் சடலங்கள் இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் கடந்த 5 ஆம் திகதி முதல் அடக்கம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்