பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 8 வயது சிறுவன் மீது உழவு இயந்திரம் மோதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி.
அட்டாளைச்சேனை பகுதியில் இன்று (30) காலை இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது உழவு இயந்திரம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது உழவு இயந்திரத்தை செலுத்திய இளைஞர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
எனினும், உழவு இயந்திரத்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்