கொரோனா தொற்றுக்குள்ளான 331 பேர் நேற்றைய நாளில் அடையாளம்
காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைத்தந்தவர்களே அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 83 பேர் நேற்றைய நாளில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 88 ஆயிரத்து 238 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 2 ஆயிரத்து 737 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய நாளில் தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்