புதிய காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசல் மஹல்லாவில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியரும் தனவந்தருமான ஒரு சகோதரர் பிரதி வெள்ளிக்கிழமைகள் தோறும் அப் பள்ளிவாயலுக்கு சுபஹ் தொழுகைக்காக வருகின்ற சகோதரர்கள் அனைவரையும் சுபஹுத் தொழுகை முடிந்தவுடன் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று காலை தேநீர் அப்பம் என்பதை வழங்கி உப சரித்து வரும் நடைமுறையை மேற் கொண்டு வருகின்றார்.
அந்தப் பள்ளிவாயலில் சுபஹ் தொழுகைக்காக வருகின்ற வர்களையும் சுப்ஹு தொழுகை முடிந்தவுடன் அவர்களையும் அவரின் வீட்டிற்கு அழைப்பது டன் வேறு பள்ளிவாயலில் தொழுதுவிட்டு சில சகோதரர்கள் அவரின் இல்லத்துக்கு வந்து காலை தேநீர் அரூந்தி விட்டு செல்கின்றனர்.
பல வருடங்களாக தொடர்ச்சியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வரும் இவரின் இந்த சகோதரரின் நடவடிக்கை தொடர்ந்து. வருகிறது
அன்புடனும் மிகவும் கண்ணியமாகவும் கௌரவமாகவும் அவரின் வீட்டுக்குச் செல்கிறவர்களை வரவழைத்து இந்த தேனீர் உபசாரத்தை செய்வதை காணக்கூடியதாக இருக்கிறது.
உலமாக்கள் முஅத்தீன்கள் ஜமாஅத்தார்கள் என பலரும் இந்தஸ தேனீர் உபசாரத்தில் பிரதி வெள்ளிக் கிழமைகள் தோறும் கலந்து கொள்கின்றனர்.
அல்லாஹ் இருக்கு நல்ல தேக ஆரோக்கியத்தையும் பொருளாதார பறக்கத்தையும் செய்வானாக ஆமீன்
எம் எஸ் எம் நூர்தீன்
26.03.2021

0 கருத்துகள்