கிழக்கு மாகாண அதிபர் இடமாற்றம் தொடர்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளருடனான சந்திப்பு..!!

 


அண்மையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண அதிபர் சேவை இடமாற்றம் தொடர்பாக அவ்விடமாற்றத்திற்குள்ளானவர்கள். இடமாற்றம் தொடர்பான தெளிவினையும் விளக்கத்தினையும் பெற வேண்டும் என்ற நோக்கில், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ நிஸாமை சந்திப்பதற்கான  கோரிக்கையினை விடுத்திருந்தனர்.


இடமாற்றத்திற்குள்ளானவர்களின் அக்கோரிக்கையினை ஏற்று, அவர்களது பிரச்சினைகளையும் இடமாற்றம் தொடர்பான விடயங்களையும் ஆராய்வதற்கு உரிய தரப்பினர்களை சந்திப்பதற்கான அவகாசத்தினை மாகாணக் கல்விப் பணிப்பாளர் வழங்கியுள்ளார்.


இச்சந்திப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 14 ஆம் திகதி (14.03.2021) பி.ப. 4.00 மணிக்கு சாய்ந்தமருது கமு/மழ்ஹறுஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் இடம் பெறவுள்ளது.


உரியவர்கள் தங்களது சேவை விபரம் இடமாற்றம் தொடர்பான  பின்புலங்களை எடுத்துக்காட்டும் முழுமையான தகவல்கள் மற்றும் ஆவணங்களுடன் வந்தால் உரிய விடயங்களில் தெளிவு பெறுதல் பயனுடையதாக இருக்கும் என்று கருதுகின்றோம்.


மேலதிக தொடர்புகளுக்கு 077 6401296

(நவாஸ் சௌபி)

கருத்துரையிடுக

0 கருத்துகள்