மோட்டார் குண்டு வெடித்து குடும்பஸ்தர் உயிரிழப்பு... குண்டுக்குள் இருந்த மருந்தை எடுக்க முற்பட்ட போது விபரீதம்.



திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனன்வெளிப் பகுதியில் 81 ரக மோட்டார் 

குண்டு வெடித்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். 


இந்தச் சம்பவம், நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.


இந்நபர்  வைத்திருந்த மோட்டார் குண்டை, கிரைண்டர் மெசின் மூலமாக அறுத்து மருந்துகளை எடுக்க முற்பட்டபோது, குண்டு வெடித்துள்ளதாகவும் இதன்போதே அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


சம்பவத்தில் உயிரிழந்தவர் சீனன்வெளி பகுதியைச் சேர்ந்த  அல்லிமுத்து ஜெகன் எனும் 45 வயதுடைய குடும்பஸ்தராவார்.


சம்பவம்  தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 தீஷான் அஹமட்

கருத்துரையிடுக

0 கருத்துகள்