
(சி.எல்.சிசில்)
தென்னாபிரிக்காவில் பரவி வரும் கொவிட்-19 வைரஸ் இலங்கையில் பரவினால் இலங்கையில் ஒரு புதிய அலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்தால் கூட தென்னாபிரிக்க வைரஸ் தொற்றும் சாத்தியம் உள்ளது.
வைரஸ் பரவினால், தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகள் அதிகரிக்கும். அதே போல் தீவிர சிகிச்சைப் பிரிவுகளின் தேவையும், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியானது வைரஸைக் கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை என்றும் மருத்துவர் பத்மா குணரட்ன கூறினார்.
0 கருத்துகள்