பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலெஸின் இல்லத்தில், அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் தனக்கும்
இடையில் ஒரு சந்திப்பு நடந்ததாகவும், தன்னை சந்திக்க விமல் வீரவன்ச நேரம் கோரியதாகவும் வலைத்தளங்களில் வெளியான செய்தி மற்றும் ஒரு வார இதழில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி அறிக்கை, வேண்டுமென்றே புனையப்பட்டவை மற்றும் அப்பட்டமான பொய்யானவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட ஊடகங்கள் தமது ஊடக நெறிமுறைகளை முற்றிலும் மீறி உள்ளது.
இந்த வழியில் தவறான செய்திகளைத் தயாரிப்பதற்கு தமது பெயரைப் பயன்படுத்தியதால் சஜித் பிரேமதாசா தனது விரக்தியையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகையில், யாருடைய உத்தரவின் பேரிலும் இதுபோன்ற போலி செய்திகளை உருவாக்கி நாட்டு மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சதித்திட்டத்திற்கு மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார்

0 கருத்துகள்