பதவிகளை விட்டு வெளியே வருமாறு கட்சி உறுப்பினர்கள் கூறினால் அரசாங்கத்தில் இருந்து
வெளியேறுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக கிராமங்களில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்கள் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர்களை தோல்வியடையச் செய்ய பொதுஜன பெரமுன பாரிய சதித் திட்டங்களை அரங்கேற்றியதாகவும் ஆனால் கட்சி ஆதரவாளர்களின் செயற்பாடுகளால் இந்தளவு வெற்றி பெற்றதாகவும் அவர் கூறினார்.
எனவே எதிர்காலத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அடிமட்ட மக்களுடன் இணைந்து செயற்படும் எனவும் மக்கள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு செவிசாய்க்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்