
சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
அதன்படி பீஜிங்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல்-869 என்ற விமானத்தில் முற்பல் 11.28 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சீனாவின் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிகளை தற்சமயம் சிறப்பு குளர்சாதன வசதிகளுடன் கூடிய லொறிகளில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சினோபாம் கொவிட் தடுப்பூசி தொகையை பெற்றுக் கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றார்.
இதனையடுத்து குறித்த தடுப்பூசிகளை இன்று ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டுள்ளார்.
0 கருத்துகள்