பசுமை சுற்றாடலுக்கு ஏற்ற புதிய காபன் பேனை சுற்றாடல் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது
தினமும் பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களினால் அகற்றப்படுகின்றன பிளாஸ்டி காபன் பேனையினால் ஏற்படுகின்ற சூழல் பாதிப்பைத் தடுப்பதற்கான மாற்றுவழியொன்றாக உக்கக் கூடிய பொருளொன்றினால் தயாரிக்கப்பட்ட,
பசுமை சுற்றாடலுக்கு வகையிலான காபன் பேனையொன்றை, கண்டி வட்டபுழுவேவைச் சேர்ந்த சவினி க்ரிஸ்டினா சுகிர்தன் என்ற மாணவி மற்றும் அவரது தந்தையான சுகிர்தன் ஆகியோரினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கண்டுபிடிப்பு முழுமையாக பசுமை சுற்றாடலுக்கு ஏற்றதுடன், இயற்கைக்கு பொருத்தமான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பேனை நேற்று (29) சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டது.
அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், எமது நாட்டில் தினமும் பாடசாலைகளிலிருந்து சுமார் 80 தொடக்கம் 100 கிலோ கிராமுக்கு இடைப்பட்ட வெற்று காபன் பேனைகள் அகற்றப்படுவதாக தெரிவித்தார்.
அகற்றப்படுகின்ற பிளாஸ்டிக் காபன் பேனைகள் உக்குவதற்கு குறைந்தபட்சம் 100 வருடங்கள் அளவு செல்வதாகவும், மைக்ரோ பிளாஸ்டிக் வகைகள் சுமார் 400 ஆண்டுகள் உக்காது இருப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Source link : Tamil News

0 கருத்துகள்