Breaking News : கொழும்பு நோக்கி வந்த பஸ் பஸ்ஸர பகுதியில் விபத்து - 7 பேர் பலி!


 மொனராகலை- பதுளை வீதியின் பஸ்ஸர 13 ஆம் தூண் பிரதேசத்தில் பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 


லுணுகலவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


குறித்த விபத்தில் மேலும் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்