களுத்துறை மாவட்டத்தின் 15 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்!


உடன் அமுலாகும் வகையில், பொலன்னறுவை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் 16 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.


இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் பதுரளிய காவற்துறை அதிகரப் பிரிவுக்கு உட்பட்ட போல்லுன்ன, இங்குரு தலுவ, மிதலன, மோரபிட்டிய, பெலெத்த, ஹெடிகல்ல, மோரபிட்டிய – வடக்கு முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


அத்துடன், களுத்துறை – தீனியாவல காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட தீனியாவல கிராமசேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.


களுத்துறை - மீகஹதென்ன காவல்துறை அதிகார பிரிவில், வலல்லாவிட்ட தெற்கு, மாகலந்தாவ, போதலாவ, கட்டுயகெலே - வெல்மீகொட, பஹல ஹவெஸ்ஸ, மிரிஸ்வத்த மற்றும் பெலவத்த கிழக்கு முதலான பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


பொலன்னறுவை மாவட்டத்தின், எலஹெர காவல்துறை பிரிவின் சருபிம கிராமசேவர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்