உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 702 பேர் கைது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 702 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக

பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


அவர்களில் 202 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 83 பேர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


பொலிஸ் தலைமையகத்தில் இன்று (24) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்