எம்.எச்.எம்.றஸான்
புனித ரமழானை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 100 மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் (26) வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் திருமதி சுகையில் அஸுஸின் ஒருங்கமைப்பில் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்படட்டது.
சாய்ந்தமருது பிரதேச பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ரிஸ்வானா, கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஆயிஷா சித்திக்கா மற்றும்
நேசன் எயிட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதேச இணைப்பாளார்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்