ரிஷாதின் கைதுக்கு எதிரான ஆர்பாட்டத்தை குழப்ப முயன்ற நாமல் குமார - கண்டுகொள்ளாத ஆர்பாட்டக்காரர்கள்.




ரிஷாத் பதியுத்தீன் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (30) கொழும்பு தெவடகஹ பள்ளிக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.




பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, முஜிபுர் ரஹ்மான், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி மற்றும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் குறித்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.




இந்நிலையில், ஆர்பாட்டத்தின் இடை நடுவில் நாமல் குமார என்பவர் ஆர்பாட்டத்திற்கு எதிரான கருத்துக்களை கூறி குழப்பம் செய்ய முயன்ற நிலையில் அவரை அங்கிருந்த யாரும் கண்டு கொள்ளவில்லை.




ஊடகங்கள் அவர் பக்கம் திரும்பிய நேரத்தில், கொரோனா பரவல் அதிகரித்துள்ள இந்நிலையில் இந்த ஆர்பாட்டம் நடத்தப்படுவதை பொலிசார் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் ரிஷாத் பதியுத்தீன் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள காரணத்தினால் அதற்கு எதிரான இந்த ஆர்பாட்டம் தடுக்கப்பட வேண்டும் எனவும் ஊடகங்களிடம் நாமல் குமார பேசினார்.




இருப்பினும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுகாதார வழிமுறைகளை பேணி முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை பேணிய நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்