(வீடியோ லிங்க் இணைக்கப்பட்டுள்ளது.)
மே தினக் கூட்டங்களைநிறுத்திவிட கொவிட் கட்டுப்பாட்டு நிலையம் மேற்கொண்ட தீர்மானத்துடன் மக்கள்விடுதலை முன்னணி இணங்கப் போவதில்லை என அதன் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி வலியுறுத்துகிறார்.
கொழும்பு பிரதிப் பொலிசுப்பரிசோதகர் தலைமை அதிபதியின் தலைமையில் நேற்று (19) அனைத்த அரசியல் கட்சிகளையும்அழைப்பித்து மே தினக் கூட்டங்களை நடாத்த விளையாட்டு மைதானங்களை ஒதுக்கீடுசெய்தல், பாதுகாப்பு உள்ளிட்ட முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் இன்றைய தினம் திடீரெனத் தோன்றிய சுகாதாரக்காரணங்களை மேலோங்கச் செய்வித்து மே தின்ககூட்டங்களை நிறுத்துவதையே மேற்கொள்ளப்போகிறார்கள் எனக் கூறினார்.
இது சம்பந்தமாக அவர்மேலதிகமாகக் கூறியதாவது....
“நேற்று கொழும்பு பிரதி பொலிசுப் பரிசோதகர் தலைமை அதிபதியின் தலைமையில்அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகளை வரவழைத்து கொழும்பு பிரதி பொலிசுப் பரிசோதகர் தலைமை அதிபதியின் அலுவலகத்தில் மே தினத்துடன் தொடர்புடையதாக விளையாட்டுமைதானங்களை ஒதுக்கீடுசெய்தல் பற்றியகலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. அந்தகந்துரையாடலில் கொழும்பு நகரசபையின் உத்தியோகத்தர்களும் கட்சிப் பிரதிநிதிகளும்கலந்துகொண்டனர். இந்த கலந்தரையாடலின்போது விளையாட்டு மைதானங்களை ஒதுக்கீடுசெய்தபின்னர் நேற்று (19) மாலை கொவிட்கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து எமக்கு தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு மே தினக் கூட்டங்களை நடாத்தும்போது கடைப்பிடிக்கவேண்டியகடைப்பிடிக்கவேண்டிய சுகாதார விதப்புரைகள் பற்றிக் கலந்துரையாட இன்றைய(20) தினத்தன்று கலந்துரையாடலொன்று நடாத்தப்படுவதாக கூறினார்கள். இன்று கொவிட் கட்டுப்பாட்டு நிலையம் சுகாதாரக் காரணங்களின் நிமித்தம் மே தினத்தைக்கொண்டாமல் இருக்க தீர்மானித்துள்ளது. உண்மையிலேயே மே தினத்தை நடத்தாமல் இருக்கமேற்கொண்ட தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஏனென்றால், சுகாதாரக் காரணிகளின் பேரில்தான் மேதினக் கூட்டங்களை நடத்தாதிருக்க தீர்மானித்திருப்பின் சுகாதாரக் காரணிகளின்நிமித்தம் நடத்தாதிருக்க வேண்டிய பல வைபவங்கள் கடந்த காலத்தில் எமது நாட்டில்நிலவின. குறிப்பாக சனாதிபதி பங்கேற்கின்றஊருடன் உரையாடல் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் குவிக்கப்பட்டார்கள். அதைப்போலவே சிங்கள இந்து புத்தாண்டில் இலட்ச்சக்கணக்கான மக்கள் பிரயாணம்செய்தார்கள். அவற்றின்போது இல்லாத காரணமொன்றைக் உருவாக்கி தற்போது இந்த அரசாங்கம்எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக மே தினத்தைக் கொண்டாட இயலாதென்பதால்அரசாங்கம் மே தினத்தை நடத்தாதிருக்க மேற்கொள்ளகினற முயற்சிதான் இது.
ஏனென்றால், இன்றளவில்அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற பல்வேறு தரப்பினர்களுக்கு தாங்கள் எந்த மேடையில் ஏறுவது எனும் முடிவினைஎடுக்க இயலாத நிலை காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சித் தலைவர்மைத்திரிபால சிறிசேன சனாதிபதி அண்மையில் அவர்கள் தனியாக மே தினக் கூட்டத்தைநடாத்தப் போவதாகக் கூறினார். அதைப்போலவேஅரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பிரமாண்டமான பொருளாதார நெருக்கடி காரணமா, உழைக்கும் மக்களின் உரிமைகள கத்தரித்து வருவதால், நாடு பாரிய பொருளாதார அழிவு காரணமாக பாரிய சிக்கல்களை எதிர்நோக்கிஉள்ளது. இந்த நெருக்கடிகளின் மத்தியில் மிகவும் தெளிவாக அரசாங்கம்சூழ்ச்சிமிக்கவகையில் மே தினத்தை குழப்ப முயற்சி செய்கின்றதென நாங்கள்நம்புகிறோம்.
எனவே, இது சுகாதாரக்காரணிகளின் பேரில் மேற்கொள்ளப்பட்டதீர்மானத்தைப் பார்க்கிலும் இந்த நேரத்தில் அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள அரசியல்நெருக்கடி, பொருளாதார நெருக்கடி காரணமாக மேற்கொண்ட தீர்மானமெனவே நாங்கள் காண்கிறோம். எனவே, குறிப்பாக நாங்கள் மீண்டும் கூறவது மே தினத்தைக் கொண்டாட மைதானங்களையும்ஒதுக்கியபின்னர் சுகாதாரக் காரணிகள் எனும் விடயத்தை முன்வைத்து மே தினத்தை நடத்தாதிருக்க எடுத்த திர்மானத்தை ஒரு கட்சி என்ற வகையில்நாங்கள் எதிர்க்கிறோம். இது சம்பந்தமாக நாங்கள் இணங்கப்போவதில்லை.
இன்று மாலை நடைபெற்றகூட்டத்தில் எங்கள் பிரதிநிதிகூட மிகவும் தெளிவாக கூறிய விடயம் சுகாதாரரவிதப்புரைக்கிணங்க மே தினக் கூட்டத்தைநடாத்துகின்ற விதம், நாங்கள் எமது பக்கத்தில் எவ்விதமாக சுகாதார விதப்புரைகளை நடைமுறைப்படுத்தப்போகிறோம் என்ற விடயத்தை நாங்கள் தெளிவுபடுத்தினோம் என்றுதான். எனவே, ஒரு கட்சி என்ற வகையில் நாங்கள் தான் மே தினக் கூட்டத்தை நடாத்துவதாஇல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும். அதனை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டிதில்லை. நாங்கள் மிகவும் தெளிவாகவும்உறுதியாகவும் எமது தீர்மானத்தில்இருக்கிறோம்.
https://www.facebook.com/jvpsrilanka/videos/4164495056902299/?t=32

0 கருத்துகள்