தென்னை மரங்களை வெட்டுவதற்கு தடை ; பெருந்தோட்ட அமைச்சு







தென்னை மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படுமென பெருந்தோட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.


சிலாபம் பகுதியில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.


அத்துடன், தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் அனுமதியின்றி வெட்டப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த நிலையில், மரங்கள் வெட்டுதல் கட்டுப்பாட்டு சட்டத்தில் கீழ் தென்னை மரங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக ரவீந்திர ஹேவாவிதாரன குறிப்பிட்டுள்ளார்.


மேலும், இந்தத் தீர்மானத்திற்கு சட்டமா அதிபர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கமைய, தென்னை மரங்களை வெட்டுவதற்கு விசேட அனுமதியினை பெறவேண்டுமெனவும் பெருந்தோட்ட அமைச்சு அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரன இதன்போது தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்