இன்று சில மாவட்டங்களில் அதிகரித்த வெப்பநிலை...





 

 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். 


மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். 


முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, பொலநறுவை, அம்பாறை, மட்டக்களப்பு மொனராகலை போன்ற மாவட்டங்களில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.


கடல் பிராந்தியங்களில் 

***************************

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். 


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில் நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மேற்குத் திசையில் இருந்தும் ஏனைய கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்தும் காற்று வீசும். 


காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான அத்துடன் புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  50 ‐ 55 km இலும் கூடிய வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும். 


கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும்.


புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.


தேசமானிய 

மொஹமட் சாலிஹீன் 

சிரேஸ்ட வானிலை அதிகாரி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்