இலக்கிய உலகின் ஓர் ஆளுமை ஆசுகவி அன்புடீன்.

 





- ஐ.எல்.எம். தாஹிர் - 


மக்கள் சுதந்திரம், மானுட மகிழ்ச்சி, மனித சமத்துவம், போன்றவைகளை இலட்சியமாகக் கொண்ட தென்கிழக்குப் பிரதேசத்தின் மூத்த இலக்கியவாதி எனது ஆத்மார்ந்த நண்பர் ஆசுகவி அன்புடீன் நீண்ட காலமாக சுகவீனமுற்ற நிலையில் தற்பொழுது வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கின்றார். 


இலக்கிய உலகில் ஐம்பது (50) ஆண்டுகளை நிறைவாக்கிக் கொண்ட இவருக்கு அண்மையில் எடுக்கப்பட்ட பொன் விழாவானது காலத்தால் அழியாத காத்திரமான நிகழ்வாகும். 


நண்பர் அன்புடீனை அப்போது பார்த்த தோற்றம் இப்போது இல்லையென்றாலும் ஆனந்தமான அமைதியான அடக்கமாகத் தனது வாழ் நாளை; வீட்டிலேயே கழித்துக் கொண்டிருக்கின்றார். 


எழுதுவது, வாசிப்பது, எழுந்து நடப்பதெல்லாம் முடியவே முடியாதென அவர் கூறிய இவ்வார்த்தைகளைக் கேள்விப்பட்டபோது அக்கணமே எனக்குள் ஏற்பட்ட கவலைகள் ஏராளம். 


ஆளைக் கொல்லும் இக்கவலைகளுக்கு மத்தியிலும் ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையான ஆடையை இறுக்கமாக அணிந்து கொண்டு அவருடன் மூன்று மணித்தியாலங்கள் அளவளாவியபோது இரட்டிப்பு மகிழ்ச்சி என்னுள் மேலோங்கிக் காணப்பட்டது. 


கடந்த கால நிகழ்வுகளின் நினைவுகள் எம் இருவருக்குமிடையே இங்கே சங்கமமாகின. 


அட்டாளைச்சேனை தினகரன் வாசகர் வட்டத்தின் முக்கிய நிகழ்வான “நிலவிலே பேசுவோம்” மாதாந்த அமர்வின் கதாநாயகன் அன்புடீன்.


 இன்றும் கூட என் முன் அவர் தோன்றும்போதெல்லாம் ஓர் நீங்காத நினைவாகவே அவர் காணப்படுகின்றார். 


தினகரன் பத்திரிகையுடன் நீண்ட காலம் இணைந்திருந்தவர்; கூடவே அப் பத்திரிகையை ஆராதித்தவர். 


வாழும் போதே உயிரோட்டமுள்ள அவர் வரலாறு பேசப்பட வேண்டும்; அவரை நினைக்கும்போது உள்ளம் பூரிப்படைய வேண்டும். 


இன்னும் அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ இலக்கியப் படைப்பாளிகளுடன் நாமும் இணைந்து எல்லோருமாக இறைனைப் பிரார்த்திப்போம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்