காசாவிலிருந்து இஸ்ரேல் நோக்கி 36 ரொக்கெட் தாக்குதல்கள் சனிக்கிழமையன்று ஏவப்பட்டுள்ள நிலையில், ஜெருசலேம் மற்றும் காசா எல்லையில் புதிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
அதன்படிஇஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் மூடப்பட்ட கர்னி கிராசிங் அருகே 700 பாலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜெருசலேமில் வாழும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்த ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கியதுடன், காசா பகுதி முழுவதும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
காசாவின் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படங்களும் வீடியோவும் சமூக ஊடகங்களில் தற்சமயம் பகிரப்பட்டுள்ளன.
மேற்குக் கரை முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, அங்கு மக்கள் இஸ்ரேலிய சோதனைச் சாவடிகளுக்கு அணிவகுத்துச் சென்றனர்.
இதற்கிடையில், பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய காவல்துறையினருக்கும் இடையில் ஒரு புதிய தொடர் வன்முறைகள் ஜெருசலேமின் பழைய நகரத்திற்கு வெளியே உள்ள டமாஸ்கஸ் வாயிலில் தொடங்கப்பட்டுள்ளன.
வாயிலில் ஏற்பட்ட மோதல்களின் போது ஆறு பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர். கிழக்கு ஜெருசலேமில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்ததாகவும் கூறப்படுகின்றது.
இஸ்ரேலிய-பாலஸ்தீனிய பதட்டங்களின் எழுச்சி புனித ரமலான் மாதத்தின் மத்தியில் நடைபெறுகிறது மற்றும் உள்ளூர் ஊடகங்களில் வெளியான யூதர்கள் மற்றும் அரேபியர்களுக்கு எதிரான சமீபத்திய தாக்குதல்களால் தூண்டப்பட்டுள்ளது
மேலும் ,அதேநேரம் பாலஸ்தீனியர்கள் 15 ஆண்டுகளில் தங்கள் முதல் பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். மேற்குக் கரை மற்றும் காசா பகுதி இரண்டிலும் நாடாளுமன்றத் தேர்தல் மே 22 ஆம் திகதியும், ஜனாதிபதித் தேர்தல் ஜூலை 31 ஆம் திகதியும் நடைபெற உள்ளது.

0 கருத்துகள்