மருத்துவத் தாவரங்களை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு!

 





பைஷல் இஸ்மாயில் - 


நாட்டில் மருத்துவத் தாவரங்களை மிக அதிகமாக உருவாக்கும் நோக்கில் இன்று காலை (16) சுவவேளை 6.40 மணியளவில் மருத்துவத் தாவரங்கள் நடும் திட்டத்தை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்குமாறு சுதேச மருத்துவ அமைச்சினால் கோரியமைக்கு அமைவாக மருத்துவத் தாவரங்கள் நாட்டி வைக்கப்பட்டது.


அதற்கமைவாக, திருகோணமலை முள்ளிப்பொத்தானை 9 வது கொலனி தங்கநகரில் அமைந்துள்ள ஆயுர்வேத நடமாடும் மருத்துவ நிலைய வளாகம் மற்றும் கந்தளாய் கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை வளாகம் போன்ற இடங்களில் மருத்துவத் தாவரங்கள் நடப்பட்டது. 


வைத்தியர்களான போல் மோனச்சந்திரன் மற்றும் வைத்திய பொறுப்பதிகாரி பிரசாதி விஜேய சேகர ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முள்ளிப்பொத்தானை பிரதேச சபை தவிசாளர் சம்பிக்க பண்டார மற்றும் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு மருத்துவ மரக் கன்றுகளை நட்டி வைத்தனர். 


இதில் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர்கள் பங்கேற்றிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்