இலங்கை, கொழும்பு கோட்டை புகையிரத்தில் நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த அனைத்து புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புகையிரத பணியாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாகவே புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
புகையிரத திணைக்களத்தில், புகையிரத பொது முகாமையாளர் ஒருவரை நியமிப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்