சர்வதேச விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்த பங்களாதேஷ் தீர்மானம்


கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்ச நிலை காரணமாக சர்வதேச நாடுகளுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இதன்படி, பங்களாதேஷின் சர்வதேச நாடுகளுக்கான விமான சேவைகள் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்தப்படவுள்ளன.


இதன் காரணமாக, பங்களாதேஷில் 500 இற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, பங்களாதேஷில் கொரோனா தொற்றினால் 6 இலட்சத்து 91 ஆயிரத்து 957 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆயிரத்து 822 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்