வரும் மாதத்தில் எந்தவொரு பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளையும் அனுமதிக்க வேண்டாம்
என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
கொரோனா தோற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட இளம் சமூகத்திலும் சிக்கல்கள் உருவாகி வருவதாக டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார்.
அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகும் கிராமங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வரும் வார இறுதியில் சுகாதாரம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புடன் இருக்கவும் பொலிசார் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.
"இந்த நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் கோவிட் கொத்தனிகள் மற்றும் துணைக் கொத்துகள் உருவாகின்றன," என்று அவர் மேலும் கூறினார்.

0 கருத்துகள்